(1) கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி எளிதாக ஏறுவதற்கும், பனை நுங்கு மற்றும் பிற பொருட்களை திறம்பட அறுவடை செய்வதற்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்.
(2) கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரம் குறித்து கீழ்க்கண்ட குழுவின் முன்பு செயல்விளக்கம் அளிக்க வேண்டும்.
(3) தோட்டக்கலை பேராசிரியர் (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்), வேளாண் பொறியியல் பேராசிரியர். (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்), தோட்டக்கலை கூடுதல் இயக்குநர் (மத்திய மற்றும் மாநில திட்டம்), தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தால் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி ஆகியோரைக் கொண்ட குழுவால் சிறந்த பனை ஏறும் இயந்திர கண்டுபிடிப்பாளர் தேர்வு செய்யப்படுவர்.
(4) அத்தகைய இயந்திரம் கண்டுபிடிப்பதற்காகும் மொத்த செலவினம், இயந்திர செயல்திறன், விலையின் உண்மைத் தன்மை மற்றும் இயந்திரத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விருது வழங்கப்படும்.
(1) நான் விருதுப் போட்டியின் விதிமுறைகளை படித்து அறிந்து கொண்டேன்.
(2) நான் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றியுள்ளேன்.